ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியாவின் பயணம்.. சீனா நமக்கு அடுத்து தான்..
இந்தியா தற்பொழுது 2030ம் ஆண்டிற்குள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை தற்போது இருந்து துவங்கியிருக்கிறது. குறிப்பாக உலகில் வளர்ச்சி பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் 2030ம் ஆண்டிற்குள் அது மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் மூன்றாம் இடத்திற்கு செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என S&P குளோபல் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை ஆகிய நாடுகளுக்கு பின்பு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் அடுத்த 7 வருடத்தில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேற உள்ளது. குறிப்பாக இந்த ஒரு அறிக்கையின் படி நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது சுமார் 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டுகளின் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. 2026-27 நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தனது கணிக்கப்பை வெளியிட்டு உள்ளது.
Input & Image courtesy: நியூஸ்