ஏரிக்கரையில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்.. சென்னை மக்கள் ஆதங்கம்..

Update: 2023-12-12 00:50 GMT

வைகை நகர் விரிவாக்கம் ஏரிக்கரை பகுதியில் நடந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தரப்பான மக்கள் ஒரு நாளைக்கு வெல்லம் காரணமாக பால் வாங்க முடியாமல் திணறி வரும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் மூலமாக வெளியான வீடியோ காட்சிகள் அங்கு இருக்கும் மக்களை கோவப்பட வைத்து இருக்கிறது. அப்படி என்ன வீடியோ தான் அது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சுமார் நூற்றுக்கும் அதிகமான பால் பாக்கெடுகள் குப்பையில் கூட்டப்பட்டு இருப்பதுதான் அந்த ஒரு சம்பவம். அங்கு இருக்கும் ஆற்றின் அருகே உள்ள கால்வாயில் அதிகமான ஆவின் பால் பாக்கெட் வீசப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி கமிஷனர் அழகு மீனா, போலீஸ் அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பால் பாக்கெட்டுகளை குடிமைப் பணியாளர்கள் கொட்டவில்லை என்று கூறினார்.


இந்தப் பகுதி மண்டலம் 4 இன் கீழ் வருகிறது. நிவாரண நடவடிக்கைகளுக்காக, CTO காலனியில் உள்ள மையத்திலிருந்து நேரடியாக குடியிருப்பாளர்கள், முகாம்களுக்கு நாங்கள் வழங்கினோம், இடைநிலை முகவர்கள் இல்லை. மேலும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக, ஊதா நிற பாக்கெட்டுகளை மட்டுமே விநியோகிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது, ஆனால் இங்கு மற்ற வண்ணங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் ஆரோக்கியா, ஹாட்சன் போன்ற பிற பிராண்டுகள் காணப்பட்டன. பாக்கெட்டுகள் டிசம்பர் 4 காலாவதி தேதியைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது" என்று கமிஷனர் குறிப்பிட்டார்.


ஆனால் உள்ளூரிலுள்ள அவர்கள் எடுத்த வீடியோக்களில் இது பற்றி குறிப்பிடும் பொழுது, அந்த பகுதி முழுவதும் ஆவின் நிறுவனத்தின் பால் பக்கெட் தான் குப்பையில் வீசப்பட்டு இருப்பதாக அவர்கள் தன்னுடைய வீடியோக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூறாவளி காரணமாக பல பகுதிகளில் டிசம்பர் 4-ம் தேதி கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது . பல சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் டிசம்பர் 4 ஆம் தேதி மூடப்பட்டன. மேலும் தங்கள் வசம் உள்ள பால் பாக்கெட்டுகளை விற்க முடியாத விற்பனையாளர்கள் கால்வாயில் கொட்டியிருக்கலாம் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News