ஆய்விற்கு சென்ற அரசு அதிகாரி ராதா கிருஷ்ணனை மடக்கி ஆதங்கத்துடன் புகார் தெரிவித்த நபர்! நாங்க மனுசங்க இல்லையா? சரமாரியான கேள்வி!

Update: 2023-12-12 12:15 GMT

கடந்த வாரத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்றளவும் மீளாமல் இருக்கும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தங்களின் உரிமைகளை கேட்டு ஆய்விற்காக வரும் அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் வழிமறித்து போராடி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அரசு அதிகாரியான கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் ஆணையர் ராதா கிருஷ்ணன் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்விற்கு சென்றுள்ளார், அவரை வழி மறைத்து ஒரு நபர் "பாருங்க சார் இந்த இடத்துல வந்து டெய்லி குப்பை கொட்டிட்டு இருக்காங்க மத்த இடத்துல இருந்து சுத்தம் செஞ்சு வந்து இங்கே கொட்டுகிறார்கள்! 

 ஆனால் இங்க இருக்கறவங்கள பார்த்த மனுஷங்களா தெரியலையா" எங்க உயிரெல்லாம் முக்கியமில்லையா? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர். இவரின் இந்த கோரிக்கையை ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இருப்பினும் இந்த நபர் தனது பகுதியில் உள்ள புகாரை தெரிவித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருக்கும் பெண் காவல் அதிகாரி நீங்க வாங்க சார் கிளம்பலாம் என்று ஆணையரை அழைத்துச் செல்ல முற்பட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த புகாரை நீங்கள் அங்கு கூற வேண்டும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு அந்த நபர் நேற்றிலிருந்து சிஎம்மிற்கு மேயருக்கு என அனைவருக்கும் புகார் அளிக்கிறேன், ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை இவ்வளவு குப்பைகளை தினமும் இங்கு வந்து கொட்டுகிறார்கள், நீங்கள்தான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணனை எங்கும் நகர விடாமல் முற்றுகையிட்டு தனது கோரிக்கையை முன்வைத்தார், இவருடன் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அரசு அதிகாரியை சூழ்ந்து கொண்டு நகர விடாமல் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

Source : கலாட்டா மீடியா

Similar News