இராணுவத்தை சீரமைத்து வரும் பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து ராணுவ தடவாளங்களை வாங்க உள்ளதாக தகவல்! விரைவில் கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்கள்!

Update: 2023-12-12 14:18 GMT

ஆக்கிரமிப்பு சீனாவை எதிர்கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை சீரமைத்து வரும் பிலிப்பைன்ஸ், சமீபத்தில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கியது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில், இரு நாட்டிற்கும் இடையே 375 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிலிப்பைன்ஸுக்கு மூன்று பிரம்மோஸ் பேட்டரிகளை வழங்க இந்தியாவிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன. 

இதனை அடுத்து பிலிப்பைன்ஸின் அதிகாரிகள் பல இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சென்று அவர்களின் சலுகைகளை ஆய்வு செய்தனர். இந்த உரையாடல்கள் தற்போது ஆரம்ப நிலையில் உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கல்யாணி ஸ்ட்ரேடஜிக் சிஸ்டம்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது ராணுவ தளங்களை பிலிப்பைன்ஸுக்கு விற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோவுக்கு இது தொடர்பாக அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை! பிலிப்பைன்சிற்கு இந்தியா உபகரணங்களை வழங்கியது மட்டுமின்றி இந்தியா ஹைட்ரோகிராஃபி மற்றும் கடல்சார் விவகாரங்களில் உதவி வழங்கியுள்ளது.

அதோடு இந்த வருட தொடக்கத்தில் இரு நாடுகளில் வெளிவரவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து, இரு நாடுகளும் கடல் சார் துறையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, இருதரப்பு கடல்சார் உரையாடல் மற்றும் ஹைட்ரோகிராஃபியில் அதிகரித்த ஒத்துழைப்பை இரு அமைச்சர்களும் வரவேற்றனர். 

Source : India defence news 

Similar News