ரத்தம் சொட்ட, சொட்ட தாக்கப்பட்ட ஐயப்ப பக்தர்.. அண்ணாமலை கண்டனம்..

Update: 2023-12-13 01:57 GMT

ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு, ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி வழிபட விரும்புவார்கள் அந்த வகையில் ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட நேரம் சன்னதியில் காத்திருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அறநிலையத்துறைக்கு சொந்தமானவர்கள், அதிக காசு கொடுத்து சுவாமி தரிசனம் செய்யும் நபர்கள் மட்டும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதன் காரணமாக கோபமடைந்த பக்தர்கள் நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டதாகவும், அதன் மூலம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக ஐயப்ப பக்தர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.




இந்த ஒரு தாக்குதல் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது பற்றி அவர் குறிப்பிடும் பொழுது, "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும், சன்னதி அருகே தாக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு சிகிச்சை அளித்ததையும் கேள்வி எழுப்பினர் மற்றும் இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது.


தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையின் இந்த திமிர் பல காரணங்களில் ஒன்றாகும். கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். மேலும் தமிழக பாஜக ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மனிதவள மற்றும் CE துறைக்கு எதிராக திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நேற்று குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News