நோ சிக்னல் நிலைமைக்கு சென்னை தள்ளப்பட காரணம் யார்? வெள்ளமா.. நிர்வாக கோளாறா ..
புயலால் பாதிக்கப்பட்ட பிறகு சென்னையில் தொலைத்தொடர்பு குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. சில தொலைபேசி மூலமாக மற்றொரு நபர்களுக்கு தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் ஏற்பட்டது. அது மட்டும் கிடையாது மின்தடை ஏற்பட்டது. இந்த இடையூறு இணைய சேவைகள் மற்றும் மொபைல் இணைப்பை கடுமையாக பாதித்தது. வீட்டிலிருந்து பணிபுரியும் மக்களை பாதிக்கிறது மற்றும் தகவல் தொடர்புக்கு இடையூறாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்எ.ல் உள்ளிட்ட முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் சென்னை முழுவதும் முடங்கின.
குறிப்பாக மிகவும் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட உதவிக்கு மற்றவர்களிடம் கேட்க முடியாத அணுக முடியாத ஒரு சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். இதில் புரியாத விஷயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக நகரம் வெள்ளத்தில் மூழ்கியது மற்றும் பல சூறாவளிகளையும் சந்தித்தது. அந்த நேரங்களிலெல்லாம் செல்போன் டவர்களும், சிக்னல்களும் சாதாரணமாகச் செயல்பட்டன. 2015 ஆம் ஆண்டில் கூட மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது தான். அப்போது கூட சிக்னல் டவர்களில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. பிறகு ஏன் இந்த முறை நடந்தது? சிக்னல் இல்லாததால் மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர்களால் அவசர உதவி எண்களைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோராயமாக 36,000-40,000 செல்போன் டவர்கள் உள்ளன. இதில் 70-80% கோபுரங்கள் சரியாக இயங்காமல் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஏன் ஏற்பட்டது? மழை பெய்யும் போது மாநில அரசு முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை துண்டித்தது, காப்பு டீசல் ஜெனரேட்டர் செட்களை நம்பியிருந்தது, அதுவும் பின்னர் தீர்ந்து போனது. TANGEDCO நுகர்வோருக்கு தொடர்ந்து சிக்னல் வழங்குவதற்கு இதுபோன்ற டவர்களுக்கு மின்சாரம் வழங்க முடியும். மேலும் அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தெரிய வருகிறது. இருந்தாலும் தற்போது உள்ள தமிழக அரசு அதை செய்யவில்லை.