பெற்றோர்கள் கேட்டிருந்தால் வெள்ளைத்துணி போடப்பட்டிருக்கும், அவர்கள் கேட்கவில்லை! அட்டைபெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை உடல்!

Update: 2023-12-13 12:55 GMT

சென்னையில் கனமழையால் கடந்த வாரம் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த சென்னை மக்கள் மத்தியில் புளியந்தோப்பில் 20 வயது பெண்ணான கர்ப்பிணி சௌமியா டிசம்பர் ஆறாம் தேதி அன்று மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் வீட்டிலேயே தன் குழந்தையை இறந்து பெற்றெடுத்தார். வெள்ளம் முழுவதும் சூழ்ந்திருந்ததால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் குடும்பம் முழுவதும் வேதனை உற்றனர்.

இதனை அடுத்து அவரது வீட்டாரின் பக்கத்து வீட்டார் சௌமியாவையும் அவரது குழந்தையையும் ஜி3 மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சைக்கிள் ரிக்ஷாவை பயன்படுத்தி உள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் கதவுகள் பூட்டப்பட்டு ஊழியர்களும் பதில் அளிக்காததால் முத்து மருத்துவமனையின் உதவியை நாடி சென்று காவல்துறையின் தலையீடு மூலம் அங்கு சௌமியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

குடும்பம் முழுவதும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது டிசம்பர் பத்தாம் தேதி கே. எம்.சி யில் குழந்தையின் தந்தையிடம் இறந்த குழந்தையின் உடல் எந்த ஒரு முக்காடும் இன்றி ஒரு அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது! மேலும் குழந்தையின் தகனத்திற்காக 2500 ரூபாய் லஞ்சத்தையும் மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுள்ளதாக சௌமியாவின் கணவர் குற்றம் சாடினார்.

இந்த குளறுபடியால் எழுந்த சர்ச்சையால் சென்னை அரசு கீழ்பாக்க மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், பெற்றோர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் குழந்தை அப்படி கொடுக்கப்பட்டது, பிரேத பரிசோதனை செய்தால் உடல் முழுவதும் வெள்ளை துணிகளை கட்டிக் கொடுப்பது வழக்கம் அதைப்பற்றி பெற்றோர்கள் கேட்கவில்லை! துணி வைத்து சுற்றி தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தால் நாங்கள் மறுத்திருக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். 

அதேசமயம் அமைச்சர் மா. சுப்ரமணியனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

Source : The Commune 

Similar News