பழங்குடியின மக்கள் மீதான வன்முறையை அனுமதிக்கும் கர்நாடகா அரசு! மத்திய நிதியமைச்சர் கண்டனம்!
கர்நாடக மாநிலம் பெலாகவியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் வைரலான நிலையில் அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் கர்நாடகாவில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நியாயம் கிடைப்பது இல்லை! சமீபத்தில் கூட பெலாகவியில் நடந்த சம்பவம் அதே காங்கிரஸ் ஆட்சி புரிந்த ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பட்டியலிட மக்களுக்கு எதிராக நடந்த சம்பவத்தை சேர்ந்தவையே, பட்டியலின மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் வாக்கு வங்கிகள் மட்டுமே என்று பதிவிட்டு இருந்தார். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலின பெண்ணிற்கு நடந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் அவதானிப்பு குறிப்புகளையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் கர்நாடக மாநிலம் பெலாகவி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 10 மற்றும் 11 க்கு இடைப்பட்ட இரவில் 42 வயதான ஒரு தாயின் மகன் வேறு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் ஊரை விட்டு ஓடி சென்றதால் அந்த தாயை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சம்பவம் பெரு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் கர்நாடக மாநில சட்ட ஒழுங்கில் உள்ள பிரச்சனை குறித்த கவலைகளையும் அதிகப்படுத்தி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த சம்பவத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும் கர்நாடக அரசிற்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
Source : The Hindu Tamilthisai