தமிழ் மொழியின் பெருமைகளை உலகறியச் செய்து இருக்கிறார் பிரதமர்.. மனதார நன்றி தெரிவித்த அண்ணாமலை..
இன்றைய தினம், இரண்டாவது காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் படிக்கும் வண்ணம் பிரெய்லி முறையிலான திருக்குறளை வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது."கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில், 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் பதிப்பிக்கப்பட்டு, தமிழின் முக்கியக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தின் மொழிபெயர்ப்பையும், சங்க இலக்கியம், இலக்கணம் தொடர்பான நூல்களையும் வெளியிட்டு, தமிழ் மொழியைப் பெருமைப் படுத்தியுள்ளார் நம் பேரன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
தேசிய அரங்கிலும், உலக அரங்கிலும் தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும் பெருமைப்படுத்தி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன். #ஹேர் ஸ்டக் வணக்கம் காசி" என்ற பதிவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்.
Input & Image courtesy:News