பெண்களை தவறாக வழிநடத்தி ஹைடெக் கலாசார சீரழிவில் ஈடுபட்ட லூலூ! ஜாமினில் விடுவிப்பு!
காலங்கள் கடந்து சென்று கொண்டே இருந்தாலும் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் கொடுமைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த லூலூ தேவ ஜமீலா தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பெண்களில் சில திருமணம் அடைந்த பெண்களை மூளைச் சலவை செய்து ஹைடெக்கான கலாச்சார சீரழிவில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் திருமணம் ஆன இளம் பெண்களை ஆண்களுடன் முறைகேடான உடலுறவு கொள்ள இலக்கு வைக்கப்பட்டு சவால்கள் வடிவில் குழுவில் தனிப்பட்ட படங்களை அனுப்ப வேண்டியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இவர் குறித்த புகாரை கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பாதிக்கபட்ட பெண் ஜமீலா மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடிப்படையாக வைத்தே IPC பிரிவுகள் 354(A), 354(C), 506, மற்றும் IT Act பிரிவுகள் 66-E, 67-A ஆகியவற்றின் கீழ் 2022 ஆம் ஆண்டின் குற்ற எண்.2 இல் வழக்குகளை எதிர் கொண்ட லூலூ தன் தாயின் இறுதி சடங்கை காரணம் காட்டி முன்ஜாமின் கோரினார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என்பதால் காவல்துறையாலும் விமான நிலையத்திற்கு லூக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஜமீலா வந்த பொழுதே குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீலாங்கரை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜமிலாவிற்கு கடந்த 15ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Source : The Commune