டிஜிட்டல் யுகத்தில் டோக்கன் முறையா! நிவாரண தொகைகாக நெடுநேரம் காத்திருக்கும் மக்கள்!

Update: 2023-12-20 01:42 GMT

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையில் தாக்கி சென்ற மிக்ஜம் புயலின் பாதிப்பிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வரும் சென்னை மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக பாதிக்கப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 6 ஆயிரம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தது. 

மேலும் நிவாரணத் தொகையானது நியாயவிலை கடைகள் மூலம் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாதாரண பெட்டி கடைகளில் கூட யுபிஐ பரிவர்த்தனை இருக்கும் வேலையில் அரசு தன் மக்களுக்கு தேவையான நிவாரணத் தொகையை ரொக்கமாக நியாய விலை கடைகள் மூலம் டோக்கன்கள் வழியாக விநியோகிப்பதாக அறிவித்தது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

ஏனென்றால், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இணைய வங்கிகள் மற்றும் ஆதார் சரிபார்ப்பு போன்ற டிஜிட்டல் தீர்வுகளில் பரவலான பயன்பாடுகள் இருந்த போதிலும் சென்னை முழுவதும் குடிமக்கள் வெள்ள நிவாரண நிதிக்காக டோக்கன்களை வாங்க வார இறுதியில் நீண்ட வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர். அப்படி நெடுநேரம் நின்று டோக்கன்களை பெறும் பொழுது உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் கூறி வெறும் கையோடு சிலரை திருப்பி அனுப்பி விடுகின்றனர்! வழங்கப்படுவது நிவாரண நிதி ஆனால் அதிலும் உதவி கேட்பவர்களின் பெயர்கள் இல்லை என்பது விமர்சிக்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி நங்கநல்லூரில் 1500 அரிசி ரேஷன் கார்டுகளை வைத்திருப்போர் உள்ளனர் ஆனால் அங்கு ஏழாயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டோக்கன்களை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் நிவாரணம் வழங்கும் பணியில் வெளிப்படத் தன்மை இருக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

Source : The Commune 

Similar News