சட்டத்தின் ஆட்சி நடக்கிறது! இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை சீர்குலைக்க முடியாது!
பிரிட்டன் நாளிதழிற்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியுரிமையை பெற்றுள்ள காலிஸ்தான் பயங்கரவாதியும் சீக்கியர் அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனையும் நியூயார்க்கில் கொலை செய்ய இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி நடைபெற்றதாகவும் இதற்காகவே ஒரு நபரை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க உள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்குப் பிரதமர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு சீர்குலைவதற்காக சில சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஒரு சில சம்பவங்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு சீர்குலைந்து விடாது என்றும் தெரிவித்தார். மேலும் யாராவது எங்களுக்கு ஏதேனும் தகவல்களை தெரிவித்தால் அது குறித்த ஆய்வு செய்து எங்கள் குடிமக்களுக்கு நல்லது அல்லது கெட்டது என எதை செய்திருந்தாலும் அது குறித்து விவரமாக ஆய்வு செய்ய தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அதோடு எதுவாக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சி நடப்பதில் உறுதியாக இருக்கிறோம், அதனால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு வலுவான ஆதரவுகள் இரு தரப்பிலும் காணப்படுகிறது என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar