சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோடி அரசு.. ஏன் தெரியுமா..

Update: 2023-12-24 01:54 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையான சாலை அமைப்பில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. ஏனென்றால் ஒரு நாட்டின் வலுவான சாலை அந்த நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த செல்லும். குறிப்பாக கிராமங்களை நகரங்களுடன் இணைப்பது, நகரங்களை மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வது போன்ற பலவற்றிற்கு சாலைகள் பிரதானமாக இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவில் கிராமங்களுக்கும் மற்றும் குக் கிராமங்களுக்கும் சாலைகள் போடப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக சாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தான் வருகிறது.


டிசம்பர் 22 நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் அதன் நிதி முடிவுகளை நேற்று அறிவித்தது. இதில் 2021-22 ஆம் ஆண்டில் ரூ14953 கோடியாக இருந்த மேற்கொள்ளப்பட்ட பணிகளின் மதிப்பு 2022-23 ஆம் ஆண்டில் ரூ19309 கோடியாக கணிசமாக உயர்ந்துள்ளது.


2021-22 நிதியாண்டில் ரூ.332.53 கோடியாக இருந்த வருவாய், 2022-23 நிதியாண்டில் ரூ.474.22 கோடியாக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 2021-22 நிதியாண்டில் ரூ .113.29 கோடியிலிருந்து 2022-23 நிதியாண்டில் ரூ .224.70 கோடியாக முன்னேறி 98.34% பாராட்டத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ஒரு பங்கின் வருவாய் 2021-22 நிதியாண்டில் ₹ 11.00 லிருந்து 2022-23 நிதியாண்டில் ₹ 21.82 ஆக உயர்ந்தது. ஈவுத்தொகை விநியோகம் 2020-21 நிதியாண்டில் ₹ 34.00 கோடியிலிருந்து 2022-23 நிதியாண்டில் ரூ .67.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ .6.55 விலையுள்ள பங்கின் முகமதிப்பு ரூ .10 ஆகும்.


இந்த ஈவுத்தொகை அதன் பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் விவேகமான நிதி நிர்வாகத்திற்கான அதன் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது, வடகிழக்கு பிராந்தியம், லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நிறுவனத்தை நிலையான வெற்றியின் பாதையில் நிலைநிறுத்துகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News