சிப் உற்பத்தியில் இந்தியாவிற்கு வந்த பொன்னான வாய்ப்பு.. சரியாக வழி நடத்தும் மோடி அரசு..
அதிக அளவிலான சிப் உற்பத்தியில் தற்போது இந்தியா மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிப் வடிவமைப்பாளர்கள், குறைக் கடத்திகளின் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறுவதற்கான இலக்கை உருவாக்க இந்தியாவுக்கு ஒரு அசாதாரண அடித்தளத்தை வழங்குகிறார்கள் என்று சிப்வார் ஆசிரியர் கிறிஸ் மில்லர் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக குளோபல் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறும் பொழுது, சிப் வடிவமைப்பு மற்றும் அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தற்போது இரண்டு முக்கிய தேவைகள் இருந்து வருகிறது. குறிப்பாக உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் மற்றும் அவற்றை விற்பதற்கான இடங்கள். இந்த இரண்டு இந்தியாவில் சரியாக கிடைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அவற்றை கணக்கசிதமாக செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான சிப்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செமிகண்டக்டர் தயாரிப்பாளர்களை ஈர்ப்பதற்காக இந்தியா $10 பில்லியன் சிப் மானியத் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், சிப் வடிவமைப்பைத் தொடர்வது ஒரு உத்தியாக அதிக வாக்குறுதியைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சிப் வடிவமைப்பில் அதிக மதிப்பு கூடுதலாக இருப்பதால், அதில் கவனம் செலுத்துவது மிகவும் புரிந்துகொள்ளத்தக்கது என்று நான் நினைக்கிறேன். இன்று நீங்கள் சிப் தொழில்துறையைப் பார்த்தால், பெரும்பாலான மதிப்பு இன்னும் சிப் வடிவமைப்பில் உள்ளது. சிப் தொழில்கள் பெருமளவில் AI தொழில்நுட்பதற்கு மிகச்சிறந்த வழிகாட்டுதல்களாக இருக்கும்.
Input & Image courtesy:News