மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல முயற்சிகளை எடுத்தவர் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ..

Update: 2023-12-26 01:25 GMT

மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கான ஊனத்தின் பிரிவுகளின் எணிக்கை 3-ல் இருந்து 5-ஆக மோடி அரசால் உயர்த்தப் பட்டுள்ளது . இந்த தகவலை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தன்னைச் சந்தித்த மாற்றுத் திறனாளிகள் தேசிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டார். “முந்தைய மூன்று பிரிவுகளான 1) பார்வையிழப்பு மற்றும் குறைந்த பார்வை கொண்டவர் 2) காது கேளாமை மற்றும் காது கேட்கும் திறன் குறைவாக கொண்டவர்கள் 3) பெருமூளை வாதம், தொழுநோயில் இருந்து குணம் பெற்றவர், குள்ளத்தன்மை உள்ளிட்ட இயக்க இயலாமை, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைநார் டிஸ்டிராபி நோய்க்கு ஆளானவர்கள் ஆகிய பிரிவுகளுடன் 4) ஆட்டிசம், அறிவுசார் இயலாமை, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன நோய் கொண்டவர்கள் 5) உட்பிரிவுகள் (1) முதல் (4) வரையிலான காது கேளாதோர்-பார்வையின்மை உட்பட அந்த நபர்களிடையே பல குறைபாடுகள் என மேலும் இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன” என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முந்தைய அரசாங்கங்களால் பிரதான நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட சமூகத்தின் பிரிவுகளை கவனிப்பதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இது உள்ளது என்று அவர் கூறினார். 2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அவர் பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.'மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016'-ன் கீழ், மாற்றுத் திறனாளிகளின் பிரிவுகள் 3-ல் இருந்து 5-ஆக உயர்த்தப் பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளிகள் மனித வளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார். குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, குடிமைப் பணிகள் தேர்வில் தகுதிபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு ஹோம் கேடர் தேர்வுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, உதவியாளர் உதவித் தொகை உயர்வு என அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்த அரசு எடுத்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News