பின் தங்கும் தமிழகத்தின் வளர்ச்சி! ஊழலாலே இந்த சரிவு என அண்ணாமலை குற்றச்சாட்டு!

Update: 2023-12-26 01:27 GMT

ஊழலால், கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தின் வளர்ச்சி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது! என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். 

சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மற்ற மாநிலங்களின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும் அப்பொழுது புரியும் 50 ஆண்டுகளில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது என்று! பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி ஊழல் காரணமாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

மத்திய அரசு உறுதியாக மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கி விடும் அதனை மக்களுக்கு கொடுத்து விட்டோம் என்று திமுக மகிழ்ச்சி அடைவதில் எந்த ஒரு பயனும் இல்லை! திமுகவின் ஊழலால் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் தமிழகத்தில் தற்போது பெய்த மழை வெள்ளம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களின் உற்பத்தி திறனை மேலும் பின் தங்க வைத்துள்ளது. அதிலும் தூத்துக்குடியில் உற்பத்தி திறனை மீண்டும் கொண்டு வருவதற்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆவது ஆகும். 

இதற்கிடையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பை தெரியப்படுத்துவதற்கு முன்பாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை அறிந்து தேவையான நிவாரண பொருட்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார், வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கும் வர இருக்கிறார். ஆனால் திமுகவினர் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி வம்பு சண்டை இழுத்து வருகின்றனர்! என்று குற்றம் சாடினார். 

Source : Dinamalar 

Similar News