உலகமே இந்தியாவை வாய்ப்புகளின் பூமியாக பார்கிறது.. பிரதமர் மோடி பெருமிதம்..

Update: 2023-12-27 01:09 GMT

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வீரப் புதல்வர்களின் அழியாத தியாகங்களை நாடு நினைவு கூர்ந்து வருவதாகவும், அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவதாகவும், வீரப் புதல்வர்கள் தினத்தில் புதிய அத்தியாயம் விடுதலைப் பெருவிழாவின் அமிர்தகாலத்தில் இந்தியாவுக்காக விரிவடைவதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இதே நாளில் கொண்டாடப்பட்ட முதலாவது வீரப் புதல்வர்கள் தினக் கொண்டாட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது வீரப் புதல்வர்களின் வீரக் கதைகள் முழு நாட்டையும் உத்வேகப்படுத்தின.


"வீரப் புதல்வர்கள் தினம் என்பது நாட்டின் தன்மையைப் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வீழாத மனப்பான்மையின் அடையாளமாகும்" என்று பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். "வீரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, வயது ஒரு பொருட்டல்ல என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார். சீக்கிய குருக்களின் பாரம்பரியத்தின் கொண்டாட்டம் என்று கூறிய பிரதமர், குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது நான்கு வீரப்புதல்வர்களின் துணிச்சல், லட்சியங்கள் இன்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் துணிச்சலை அளிப்பதாக கூறினார். பாபா மோதி ராம் மெஹ்ராவின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், திவான் தோடர்மாலின் பக்தி ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர், " வீரப் புதல்வர்கள் தினம் என்பது ஈடுஇணையற்ற துணிச்சல்மிக்க இதயங்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஒரு நாட்டின் மரியாதையாகும்" என்று கூறினார். குருக்கள் மீதான இந்த உண்மையான பக்தி, நாட்டின் மீதான பக்தியை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ் ஆகிய நாடுகள் வீரப் புதல்வர்கள் தினம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததால், வீரப் புதல்வர்கள் தினம் இப்போது சர்வதேச அளவில் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சம்கவுர், சிர்ஹிந்த் போர்களின் ஒப்பிடமுடியாத வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த வரலாற்றை மறக்க முடியாது என்று கூறினார். கொடுமையையும் சர்வாதிகாரத்தையும் இந்தியர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் எதிர்கொண்டார்கள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News