தூத்துக்குடி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்.. மத்திய நிதியமைச்சர் உறுதி..

Update: 2023-12-28 01:18 GMT

மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ள மீட்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெருமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவில் பகுதிக்கும் சென்ற போது அங்கு ஒரு பஞ்சாயத்தில் தலையிட வேண்டிய அவசியம் நிர்மலா சீதாராமனுக்கு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தங்களுடைய குறைகளை மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் கேட்டு மக்களுக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்று உறுதியளித்து இருக்கிறார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிர்வகிக்க, வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News