கேப்டன் மறைவு செய்தி கேட்டதும் உருகி போன பிரதமர் மோடி!

Update: 2023-12-28 12:02 GMT


தேசமே நமது நலன் என்ற வகையிலான பல கருத்துக்களைக் கொண்ட வீரராக பல திரைப்படங்களை நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற கேப்டன் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் தமிழ் திரையுலகம் தாண்டி தமிழக மக்களும் பல அரசியல் தலைவர்களும் இவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


கேப்டன் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை தொடங்கி 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டார், 232 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்திய கேப்டன் விருத்தாச்சலம் தொகுதியில் பெரும்பான்மையான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தேமுதிகவிற்கு 8.4 % வாக்குகள் கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து 2019 ஆண்டிலும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியது. இப்படி கட்சி ஆரம்பித்து தொடர்ந்து இரு தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் அதில் 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு 29 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதனால் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவரானார் கேப்டன் விஜயகாந்த். 


இருப்பினும் அதற்குப் பிறகு விஜயகாந்த்விற்கும் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட மோதலால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. 2014 ஆண்டு என்பது தற்போது பிரதமராக உள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சரிலிருந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டம்! 



முன்னதாக 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியாவிற்கு நரேந்திர மோடி அதேபோன்று தமிழகத்திற்கு விஜயகாந்த் என்ற பல வசன முழக்கங்களை தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்தார். அதுமட்டுமின்றி பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமராவதற்கு தமிழகத்தில் முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் விஜயகாந்த் தமிழகத்தில் மேற்கொண்ட பிரச்சாரங்களே ஒரு காரணம், குறிப்பாக சொல்லப்போனால் தமிழகத்தில் பல கிராமங்களுக்கு நரேந்திர மோடி என்னும் பெயரை உச்சரித்து கொண்டு சென்ற முக்கிய பங்கு விஜயகாந்த் அவர்களுக்கு உண்டு.


அந்த தேர்தலின் பிரச்சாரங்கள் முழுவதையும் பம்பரமாக சுழன்று கொண்டு மேற்கொண்டார் கேப்டன், இதன் வெற்றியாக மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்து பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியற்றார். 


பிரதமரின் பதவியேற்பு விழாவிலும் கேப்டனை பிரதமர் மோடியே அழைத்து கேப்டனை ஆற தழுவிக் கொண்டு எனது பாசத்தை வெளி காட்டினார். அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் மீது அன்பை வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயகாந்தின் மறைவு என்பது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது. 


இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அதை நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார். மேலும் கேப்டனின் மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Similar News