மத்திய அரசால் மரண தண்டனையில் இருந்து தப்பிய முன்னாள் கப்பற்படை வீரர்கள்! தண்டனையை குறைத்தது கத்தார் நீதிமன்றம்!
இந்திய கப்பற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாடப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாக்கபட்டிருந்தனர். இந்த தகவலை அறிந்த மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீடு செய்தது, மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கத்தாருக்கான இந்திய தூதரும் சென்று உள்ளனர்.
இதனை அடுத்து இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அதாவது தூக்கு தண்டனையிலிருந்து சிறை தண்டனையாக கைது செய்யப்பட்ட முன்னாள் கப்பற்படை வீரர்களின் தண்டனைகள் குறைக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 என்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பொழுது கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தை சந்தித்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவை மேம்படுத்துவதை குறித்தும் கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை குறித்தும் எடுத்துரைத்தார் என்று இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : The Hindu Tamilthisai