தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுப் பெறும் பிரதமரின் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை'..
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் அகரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் நலத்திட்டங்களான ஊட்டச்சத்துத், திட்டம், ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்திய உணவுக் கழகம் சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அஞ்சல் துறை சார்பில் காப்பீடு திட்டங்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டம், தங்க மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த யாத்திரையின்போது வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. பல்வேறு தரப்பில் இருக்கும் மக்களும் இந்த வருட நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அரசினுடைய திட்டங்களை குறித்து தெளிவான ஒரு கருத்தை அடைந்து இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி, எண்ணெய் நிறுவங்கள், இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நினைவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News