"இந்திய கடற்படை உயர் அதிகாரிகளின் தோள்பட்டை எபாலெட்டுகளில் சத்ரபதி சிவாஜி ராஜமுத்திரை" புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

Update: 2023-12-31 01:55 GMT

கடற்படையில் உயர் அதிகாரிகளுக்கு சத்ரபதி சிவாஜி ராஜ முத்திரையை பிரதிபலிக்க கூடிய புதிய தோள்பட்டை எபாலெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. 

கடற்படை தினமான கடந்த டிசம்பர் நான்காம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்திரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த பின்பு கடற்படையின் அட்மிரல் பொறுப்பு வகிப்பவர்களுக்கு புதிய தோள்பட்டை எபாலெட்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அது சத்ரபதி சிவாஜியின் ராஜ முத்திரையை பிரதிபலிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். 

அதன்படியே தங்க நிறத்திலான கடற்படை சின்னம், எட்டு திசைகளைக் குறிக்கும் வகையிலான எக்கோணம், வாள், தொலைநோக்கி ஆகியவற்றுடன் சத்திரபதி சிவாஜியின் ராஜ முத்திரையையும் பதித்து கடற்படையின் அட்மிரல் பொறுப்பில் வகிப்பவர்களுக்கு புதிய தோள்பட்டை எபாலேட்ட்ஸ் வடிவமைக்கப்பட்டது. அதோடு இந்திய கடற்படையில் அட்மிரல், வைஸ் அட்மிரல், சர்ஜ் ரியர் அட்மிரல், ரியர் அட்மிரல் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர்களின் தோள்பட்டை எபாலெட்டஸ் மாற்றப்பட்டுள்ளது. 

Source : ETV Bharat & Asianet Tamil

Similar News