சுதந்திரப் போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி !

Update: 2024-01-01 01:31 GMT

2023 ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்பொழுது ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் பாரத பூமியை நம் வீரமங்கைகள் பெருமை படுத்தி உள்ளனர். அவர்களில் நம் நாட்டின் மிக முக்கியமாக பெண்களாக சாவித்திரிபாய் புலேவையும், ராணி வேலுநாச்சியாரையும் கூறலாம். 

வரலாற்றில் மிக முக்கிய பங்கு ஆற்றிய சாவித்திரிபாய் புலேயின் பெயரை கேட்கும் போதே அவர் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் ஆற்றிய பங்கே நமக்கு நினைவுக்கு வரும், ஏனென்றால் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை தெரிவித்து அவர்கள் கல்வி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதற்காகவே அவர் இயற்றிய கவிதைகள் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மஹாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் புலே உடன் சாவித்திரிபாய் புலே பள்ளிகளை திறந்தார், கல்வி மூலமே சமுதாயத்தை அதிகாரம் பெற செய்ய முடியும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். 

அடுத்ததாக ஆங்கில ஆட்சிக்கு எதிராக போராடிய வீரமங்கைகளில் வேலுநாச்சியாரும் ஒருவர்! இன்றளவும் தமிழகத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் வேலு நாச்சியாரை வீரமங்கை என்றே நினைவு கூறுகின்றனர். சிவகங்கை ஆண்டு கொண்ட வேலுநாச்சியாரின் கணவரை ஆங்கிலேயர்கள் கொன்ற பொழுது வேலுநாச்சியாரும் அவரது மகளும் தப்பி மருது சகோதரர்களுடன் இணைந்து ஒரு பெரும் படையை உருவாக்கி, ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரிய தைரியத்துடன் போர் தொடுத்தார்! அன்று ராணி வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காட்டிய வீரமும் தைரியமும் இன்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. 

மேலும் இந்த இரண்டு துணிச்சலான பெண்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ராணி வேலு நாச்சியாரை குறித்தும் சாவித்திரிபாய் பூலே குறித்தும் குறிப்பிட்டு பேசினார். முன்னதாக இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால் ஆங்கில புத்தாண்டுக்கான வாழ்த்துகளை பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். 

Source : Dinamalar

Similar News