உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி நிலப்பிரச்சனை வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்துள்ளார்.
அயோத்தியில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று அயோத்திக்கு சென்ற பிரதமர் விமான நிலையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயோத்தி தாம் ரயில் நிலையத்திற்கு காரில் ஊர்வலமாக சென்றார். அப்பொழுது சாலையின் இரு பக்கங்களில் இருந்தும் பிரதமரை மலர் தூவி வரவேற்று வந்தனர்.
அந்த நிலையில் பிரதமரின் நான்கு சக்கர வாகனம் பாஞ்சி தோலா என்ற இடத்திற்கு சென்ற பொழுது பாபர் மசூதி நிலை பிரச்சனை வழக்கில் முஸ்லிம் தரப்பிற்கு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரி ரோஜா இதழ்களை தூவி பிரதமரை வரவேற்றுள்ளார். அது மட்டும் இன்றி "நம்மிடத்திற்கு பிரதமர் வந்துள்ளார் அவர் தற்பொழுது நம்முடைய விருந்தினர் மட்டுமின்றிநம்முடைய பிரதமரும் கூட அதனால் எங்கள் வீட்டிற்கு முன்பு அவர் வரும்பொழுது மலர் தூவி அவரை வரவேற்றேன்" என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்படும் பொழுது அதன் முதல் அழைப்பிதழ் இக்பாலுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : The Hindu Tamilthisai