ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இஸ்ரோவின் ஜிசாட் செயற்கை கோள்! கைகோர்த்தது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனங்கள்!
அமெரிக்க தொழிலதிபர் எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதல் முறையாக தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. அதாவது மத்திய அரசின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துக் கொண்டதன் அடிப்படையில் இந்திய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய ஜிசாட் - 20 என்ற தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை பால்கான் - 9 ராக்கெட் விண்ணிற்கு ஏந்திச் செல்ல உள்ளது.
இந்த பால்கான் - 9 ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஆகும். மேலும் இந்த ஜிசாட் - 20 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் குளோரிடாவிலுள்ள ஸ்பேஸ் ஏவுதலத்தில் இருந்து லென் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் - 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது குறித்த தகவலை நியூ ஸ்பேஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. மேலும் ஜிசாட் - 20 செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 48 Gpbs HTS திறனை வழங்குவதோடு 4700 கிலோ எடையையும் கொண்டது. அதுமட்டுமின்றி தொலை தொடர்பு வசதி இல்லாத தொலைதூரத்தில் உள்ள பிராந்தியங்களுக்கு தொலைதொடர்பு வசதியை வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Asianet news Tamil