கேப்டனுக்கு பிரிவினைவாதமே பிடிக்காது...! விஜயகாந்தை நினைத்து உருகிய பிரதமர் மோடி.....!

Update: 2024-01-03 15:41 GMT

கேப்டனுக்காக உருகிய பிரதமர்! 


திரைப்படங்கள் மூலம் தமிழக மக்கள் நெஞ்சில் நீங்க இடம்பிடித்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்த திடீர் செய்தி தமிழ் திரை உலகையும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களையும் பெரிதும் பாதித்தது.



பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்தின் இறப்பு செய்து பெரும் வருத்தத்தை அளித்தது மேலும் தனது இரங்கலையும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் சார்பாகவும் ஒட்டுமொத்த மத்திய அரசின் சார்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு அனுப்பி வைத்து விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு அஞ்சலி செலுத்தும் படி அனுப்பி வைத்தார். 


இந்த நிலையில் திருச்சியில் புதிய விமான நிலையத்தின் முனையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி . முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் அதில் உரையாற்றிய பிரதமர் அங்கும் விஜயகாந்தை பற்றி உருகி உருகி பேசினார். 



இந்த நிலையில் பிரதமர் மோடி கேப்டன் விஜயகாந்த் குறித்து தன் மனதில் உள்ள கருத்துக்களை அனைத்தையும் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பதிவிடும்போது, 'மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான திரு விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக விளங்கிய அவருடன் நான் பல நேரங்களில் நெருக்கமாகப் பழகியதுடன், அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.



கேப்டன் பன்முக ஆளுமைத்தன்மை கொண்டவர். இந்திய சினிமா உலகில் விஜயகாந்த் அளவுக்கு அழியாத முத்திரை பதித்த நட்சத்திரங்கள் வெகு சிலரே. அவரது ஆரம்ப கால வாழ்க்கை, திரைப் பிரவேசம் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். எளிமையான ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவின் உச்சம் வரையிலான அவரது பயணம், சாதாரண ஒரு நட்சத்திரத்தின் கதையாக, இடைவிடாத முயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வரலாறாக அமைந்தது. புகழுக்காக அவர் சினிமா உலகில் நுழையவில்லை. ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் உந்தப்பட்ட பயணம் அவருடையது. அவரது ஒவ்வொரு படமும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், அவரது சமகால சமூக நெறிமுறைகளையும் பிரதிபலிப்பதுடன் பரந்த அளவிலான ரசிகர்கள் மனதில் ஆழமாக எதிரொலித்தது. 


கேப்டன் ஏற்று நடித்த பாத்திரங்களையும் அவர் பிரதிபலித்த விதமும் சாமானிய குடிமக்களின் போராட்டங்களைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டினார். அநீதி, ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய கதாபாத்திரங்களில் அவர் அடிக்கடி தோன்றினார். அவரது திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் நற்பண்புகளையும், தீமைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கின என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 


மகத்தான புகழைப் பெற்ற பிறகு, உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு, கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான அவரது காதல் மாறாமல் அப்படியே இருந்தது. அவரது திரைப்படங்கள்! கேப்டனின் தாக்கம் வெள்ளித்திரையுடன் நின்றுவிடவில்லை. அரசியலிலும் நுழைந்து சமூகத்திற்கு மேலும் விரிவான முறையில் சேவை செய்ய அவர் விரும்பினார். அவரது அரசியல் பிரவேசம் மிகுந்த துணிச்சலும் தியாகமும் நிறைந்த வரலாறாகும் என்று ஒரு நீண்ட கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி கேப்டனை குறித்து எழுதி பதிவிட்டுள்ளார் இது இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Similar News