தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை எடுத்துரைத்த நிதி அமைச்சர்! கூடுதலாகவே வழங்கப்படுகிறது!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்தார். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார், அதில் இங்கு தமிழக அரசுக்கு எந்தவிதமான உதவிகளையும் மத்திய அரசு செய்வதில்லை என்ற ஒரு பரப்புரை இருக்கிறது ஆனால் மத்திய அரசு தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தான் வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு எந்த வித விரோதமான இல்லை அந்த மனப்பான்மையுடன் வரி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் வைத்துக் கொண்டதும் இல்லை! கடந்த 2014 முதல் 2023 வரை மத்திய அரசு தமிழகத்திடமிருந்து பெற்ற வாரியானது ரூபாய் 6.23 லட்சம் கோடி, ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி என்பது ரூபாய் 6.96 லட்சம் கோடி! வரியாக தமிழகத்திடமிருந்து பெறப்படும் நிதியிலிருந்து கூடுதலாகவே தமிழகத்திற்கு கொடுத்துள்ளோம்.
மாதந்தோறும் தமிழகம் கேரளா போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறோம். தமிழகத்திற்காகவே பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக 11,116 கோடி ரூபாயும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக 37,965 கோடி ரூபாயும், கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்காக 4,836 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம்.
மேலும் மாநிலத்திலிருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வரியையும் முழுமையாக மாநில அரசுகளுக்கு தான் கொடுத்து வருகிறோம். அதன்படி தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியாக 36 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த தொகையானது 37 ஆயிரத்து 370 கோடி ரூபாய் ஆகும்! இதனால் மத்திய அரசு எந்த மாநிலத்தின் மீதும் பாகுபாடு காட்டியது அல்ல மாதந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி கொடுத்து வருகிறோம் சில மாதங்களில் முன்கூட்டியே அடுத்த மாத செலவிற்கு தேவையான நிதியையும் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
Source : Dinamalar