பத்திரப்பதிவு அலுவலகங்களில் வாங்கப்படும் மூர்த்தி ஃபீஸ்! பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் அண்ணாமலை!
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையை பொறுத்த வரைக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவரை சந்தித்து அவரிடம் கமிஷன் கொடுத்தால் ஆறு மணிக்குப் பிறகும் பத்திரப்பதிவு செய்து தருவார்! மேலும் பத்திரப்பதிவிற்கான கட்டணம் கொடுத்த பிறகும் 5500 ரூபாய் சாதாரணமாக ஒரு பத்திரத்திற்கு தமிழக முழுவதும் வாங்குகிறார்கள்! இந்த 5500 ரூபாய்க்கு பெயர் என்பது மூர்த்தி பீஸ் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் வந்த பிறகு, பத்திரப்பதிவு துறையில் ஊழல் என்பது இமாலய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மதுரையை ஆரம்பித்து தமிழக முழுவதுமே இன்று பத்திரப்பதிவுத்துறையில் புரோக்கர்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். இலவசமாக செய்யக்கூடிய பவர் ஆப் அட்டாணி வேலையை கூட 5,500 ரூபாய் கொடு! ஒரு ஏக்கருக்கு இவ்வளவு கொடு என்று லட்சக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணம் முழுவதும் அன்றன்று மாலையில் அதிகாரிகளுக்கு சென்று விடும். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி வருகின்ற காலத்தில் தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழ்நாடு முழுவதுமே பத்திரப்பதிவு அலுவலகம் புரோக்கர்களின் கையில் தான் உள்ளது அதிகாரிகளின் கையில் இல்லை! மேலும் பத்திரப்பதிவு அதிகாரிகளின் வீடு, அலுவலகம் மற்றும் புரோக்கர்களிடம் ரெய்டு நடைபெற்றால் அதிக அளவில் சிக்கும் என்று குற்றம் சாட்டினார். அதோடு பத்திரிகையாளர்களும் இது குறித்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பேட்டி எடுங்கள் என்றும் தெரிவித்தார்.