கடலூரைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களை மறந்த தமிழக அரசு! கடலூர் மக்களுக்கு அவர்களின் பெருமைகளை முதலில் எடுத்துரைத்த பிரதமர்!

Update: 2024-01-10 02:33 GMT

கடந்த ஜனவரி எட்டாம் தேதி அன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடலூரில் தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு இருந்தார். அந்த நடை பயணத்தில், கடலூரில் மிகப்பெரிய இரண்டு மனிதர்களை தமிழக அரசு பேசாமல் இருக்கிறது ஆனால் நாங்கள் பேசுகிறோம்! பிரதமர் முன்னதாகவே மன்கிபாத் நிகழ்ச்சியிலே பேசிவிட்டார். கடலூரைச் சேர்ந்த ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமண சாமி முதலியார் அவர்கள் இருவரை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி அவர்களை அறிமுகப்படுத்தி விட்டார். 

அவர்களைப் பற்றி இங்கிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய ஆசை! 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு பாகிஸ்தான் காரனுக்கு நமது லட்சத்தீவு மீது ஒரு கண்ணு! இதற்காகவே பாகிஸ்தான் தனது கப்பலை அனுப்பி லட்சத்தீவில் தனது கொடியை நாட்ட முடிவு செய்தான்!, இந்த தகவல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு கிடைத்தவுடன் கடலூரைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களிடம் உடனடியாக கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பேசி பெரும் படையை திறட்டிக் கொண்டு லட்சத்தீவிற்கு செல்லுங்கள், பாகிஸ்தானுக்கு முன்னாடி இந்திய கொடியை அங்கு நட்டு வையுங்கள் என்றார், 

அதனால் தான் இன்று லட்சத்தீவில் நமக்கு ஒரு எம்பி இருக்கிறார், லட்சத்தீவு இந்தியாவுடன் இருக்கிறது. இவற்றிற்கு முக்கிய காரணம் கடலூரைச் சேர்ந்த ஆற்காடு ராமசாமி முதலியாரும் லட்சுமண சாமி முதலியாருமே! இவர்களைப் பற்றி தமிழ்நாடு பாட புத்தகத்தில் எங்கேயும் படித்திருக்கிறோமா? என்று கேள்வியை முன் வைத்தார் அண்ணாமலை

Source : The Commune 

Similar News