ஆண்ட்ரியாவும், அதானியும்...! முதலீட்டாளர்கள் மாநாடு பரிதாபங்கள்.....!

Update: 2024-01-11 01:38 GMT

நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தமிழக அரசு செய்த செயல் கடுப்பில் முதலீட்டாளர்கள்! 


கடந்த ஜனவரி 7 மற்றும் எட்டாம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் உலக முதலீடாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்ததோடு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலும் பங்கேற்றார். 


இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமான பங்குதாரர் நாடான சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா போன்ற ஒன்பது நாடுகளில் இதில் பங்கேற்றதோடு 50 நாடுகளில் சேர்ந்த தொழில் பிரதிநிதிகளும் முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்து கிட்டத்தட்ட 6. 64 லட்சம் கோடி ரூபாய்கான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்! இதன் மூலமாக தமிழகத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்தது செய்திகளில் பரபரப்பாக வெளியானது. ஆனால் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவின் நடிகையான ஆண்ட்ரியாவை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து சில பாடல்களையும் பாட வைத்துள்ளது திமுக அரசு. 


மாபெரும் மாநாடாக ஏற்பாடு செய்து பல நாடுகளின் பிரதிநிதிகளை வரவழைத்து முதலீடு குறித்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஆண்ட்ரியாவே அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை திமுக அரசு ஏற்பாடு செய்து ஆண்ட்ரியாவை பாட வைத்தது சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது கலைஞர் 100 நிகழ்ச்சியில் பண்ண வேண்டியதை முதலீட்டாளர் மாநாட்டில் பண்றாங்க பாட்டு கேட்டுட்டு முதலீடு பண்ணுவாங்களா? என்றும் முதலீட்டாளர்கள் இதையா பார்த்து முதலீடு செய்வார்கள் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. 


அதிலும் குறிப்பாக முதலில் எடுத்தவுடனே ஆண்ட்ரியா "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" என்று பாடிய பாடல் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனை விட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதானி குறித்தும் பிரதமரை குறித்தும் விமர்சனம் செய்த வீடியோவையும் பதிவிட்டு மறுபக்கம் இதே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குடும்பம் கிட்டத்தட்ட 42,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து இதன் மூலம் தமிழ்நாட்டில் 10,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இவர்களது தொலைக்காட்சி நிறுவனத்தில் வெளியான செய்தியும் ஒப்பிடப்பட்டு அமைச்சர் உதயநிதியையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர் இணையவாசிகள்...


அதாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் எங்கள் தமிழகத்தில் எத்தனை திறமைமிக்க இளைஞர்கள் உள்ளனர், நீங்கள் இங்கு முதலீடு செய்தால் என்ன பயனை பெறுவீர்கள், எங்களிடம் என்ன வளங்கள் அதிகமாக உள்ளது, படித்தவர்கள் அதிகமாக உள்ளனர்! இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்! இதனால் நீங்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் எங்களால் செய்து தர முடியும்! உள்கட்டமைப்பும் நன்றாக உள்ளது மற்றும் விமான கட்டமைப்பும் நன்றாக உள்ளது என நமது மாநிலத்தின் நன்மைகள் அனைத்தையும் பட்டியலிட்டு தனது முதலீட்டாளர்களை ஒரு மாநில அரசு ஈர்க்க வேண்டும். ஆனால் சினிமா நடிகையான ஆண்ட்ரியாவை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பாட வைத்தால் எப்படி முதலீடுகளை ஈர்க்க முடியும்! இதுவும் சாத்தியமாகுமா? என்ற வகையிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.


வழக்கம்போல திமுக அரசு தரப்பில் இருந்து இந்த விமர்சனங்களுக்கு எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News