அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விரதத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது ராமர் கோவிலின் திறப்பு விழாவில் ராமரை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளதால் இந்த விரதத்தை மேற்கொள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கோதாவரி நதி கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தியதோடு பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்துள்ளார்.
மேலும் இந்த கோவிலில் தூய்மை செய்யும் பணியிலும் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் கோவில் வளாகத்தில் தண்ணீர் வாளியை தானே தூக்கிக்கொண்டு சென்று தூய்மை செய்யும் பணியிலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source : Dinamalar