இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் இந்திய இளைஞர்கள்.. பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்..

Update: 2024-01-14 03:19 GMT

இளைஞர்கள் அனைவரும் ராமர் கோயில் குடமுழுக்கு நன்னாளில் நாட்டின் அனைத்து கோயில்களிலும் தூய்மை இயக்கத்தை மேற் கொள்ளுங்கள். "புதிய திறமையான சக்தியாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. இன்றைய இளைஞர்கள் வரலாறு படைக்கவும், தங்கள் பெயர்களை வரலாற்றில் பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. இன்று, நாட்டின் மனநிலையும், நடைமுறையும் இளமையாக உள்ளன. அமிர்த காலத்தின் வருகை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. 'வளர்ச்சி அடைந்த பாரதம்’ உருவாக்க இளைஞர்கள் இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஜனநாயகத்தில் இளைஞர்களின் அதிக பங்கேற்பு நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.


இளைஞர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றினால், சமுதாயம் முன்னேறும்" என்று மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் ராஜமாதா ஜிஜாவ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 'வளர்ச்சியடைந்த பாரதம்@ 2047 இளைஞர்களுக்காக, இளைஞர்களால்' என்ற கருப்பொருளில் மாநில அணியின் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார். இதில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மல்லாகம்ப், யோகாசனம் மற்றும் தேசிய இளைஞர் விழா பாடல் உள்ளிட்டவை நடைபெற்றன.


கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் இளைஞர் சக்திக்கான தருணத்தைக் குறிக்கிறது என்றும், அடிமைக் காலத்தில் நாட்டை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் ஊக்குவித்த சுவாமி விவேகானந்தரின் மகத்தான ஆளுமைக்கு அது அர்ப்பணிக்கப் படுவதாகவும் கூறினார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான நேற்று கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அனைத்து இளைஞர்களுக்கும் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News