ராமர் பெயரில் அன்னதானம், சிறப்பு பூஜைக்கு தமிழக அரசு தடையா.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்..

Update: 2024-01-22 02:10 GMT

இந்தியாவிலேயே அதிகமான கோவில்களை கொண்ட முக்கிய மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த விழாவை தங்களுடைய சொந்த விழாவாக பார்த்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய அறிக்கையில் கும்பாபிஷேகம் நடைபெறும் தினத்தில் கோவில்களில் எந்த ஒரு சிறப்பு பூஜையும் நடைபெறாது. மேலும் ஸ்ரீ ராமர் பெயரில் எந்த ஒரு அன்னதானம் பஜனை நடைபெறக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறது.

எனவே கோவில்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் ஸ்ரீ ராமர் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெறக்கூடாது. அதற்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேச்சு பொருளாகி ஒரு சம்பவமாக உருவாக்கி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் தன்னுடைய எதிர்ப்பை பதிவிட்டு இருக்கிறார்.


இது பற்றி மத்திய நிதி அமைச்சர் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடும் பொழுது,"22 ஜனவரி 24 அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் என எதுவும் அனுமதிக்கப் படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News