தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயங்கள்.. பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்..
அருள்மிகு ரங்கநாதசுவாமி கோயில் திருச்சியின் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். புராணங்கள் மற்றும் சங்க கால நூல்கள் உட்பட பல்வேறு நூல்களில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதன் கட்டிடக்கலை பிரம்மாண்டம் மற்றும் அதன் கலை வடிவமிக்க கோபுரங்களுக்கு பிரபலமானது. இங்கு வழிபடப்படும் முக்கிய தெய்வம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆவார். இது பகவான் விஷ்ணுவின் சயன வடிவமாகும். இந்த கோவிலில் வழிபடப்பட்ட விக்கிரகத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பை வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஸ்ரீராமரும் அவரது முன்னோர்களும் வழிபட்டு வந்த விஷ்ணு உருவத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விபீஷணரிடம் அவர் கொடுத்ததாக நம்பப்படுகிறது. வழியில் இந்த சிலை ஸ்ரீரங்கத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
ஜனவரி 21 அன்று தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்தார். தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் சென்றார். தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். மகான் கம்பன் தனது ராமாயணத்தை முதன்முதலில் வெளி உலகத்துக்கு அரங்கேற்றிய கோவிலில் கம்ப ராமாயணத்தின் பாராயணத்தையும் பிரதமர் கேட்டறிந்தார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது; "ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்.”
தமிழ்நாட்டில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வழிபாட்டில் ஈடுபட்டார். இது குறித்து அவர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: "140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: News