அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்... இலங்கையிலும் விமர்சியாக கொண்டாடிய மக்கள்..
சீதை அம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்து கொண்டிருக்கும் போது இலங்கையின் சீதா எலியா கோவிலில் இருந்து பல்வேறு தரப்பு பக்தர்கள் இந்த ஒரு நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.
இலங்கையில் சீதா எலியா கோவில். இலங்கையில் உள்ள ராமாயணப் பாதையில் உள்ள முக்கிய கோயில் & யாத்திரையுடன் தொடர்புடையது. குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் அமைந்திருக்கும் ராமர் சீதா கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நேற்றைய தினம் பல்வேறு இலங்கையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும் இதற்காக பக்தர்கள் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்கும். இந்த இடம் சீதை ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று நம்பப்படுகிறது.
ராவணன் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தராகக் கருதப்படுகிறார். இருந்தாலும் ராவணன் தன்னுடைய தவறான எண்ணத்தின் காரணமாக சீதைப் பிராட்டியை கடத்திக் கொண்டு இலங்கை சென்றார். சீதை இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட இடமாக தற்போது இருக்கும் இந்த ஒரு கோவில் அறியப்படுகிறது. இந்த ஒரு கோவில் தான் கும்பாபிஷேக தினத்தன்று சிறப்பு பூஜைகள் சீதாப்பிராட்டி என் பெயரில் நடைபெற்றன.
Input & Image courtesy: News