பெண் குழந்தைகளின் கல்வி பிரதானம்.. மோடி அரசினால் ஏற்பட்ட மாற்றங்கள்..

Update: 2024-01-25 12:47 GMT

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளின் அசாத்திய சாதனைகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகளின் உறுதி மற்றும் சாதனைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகளின் வளமான திறன்களையும் அங்கீகரிப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.


ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், அவர்கள் வாழவில் வளர்ச்சி அடையவும், செழிப்பாக முன்னேறவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் தேசத்தை உருவாக்கக் கடந்த பத்தாண்டுகளாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நரேந்திர மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது, "தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளின் உறுதி மற்றும் சாதனைகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.


அனைத்துத் துறைகளிலும் ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறன்களையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். பெண் குழந்தைகள் நமது நாட்டையும் சமூகத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள். ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி கற்கவும், வாழ்வில் வளர்ச்சி அடையவும், செழிப்பாக முன்னேறவும் வாய்ப்பளிக்கும் வகையில் தேசத்தை உருவாக்க, கடந்த பத்து ஆண்டுகளாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது."

Input & Image courtesy: News

Tags:    

Similar News