வளர்ச்சியடைந்த பாரதம், நமது லட்சியப் பயணம்.. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி..
வளர்ச்சியடைந்த பாரத நமது லட்சியப் பயணம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 12,525 கிராமப்பகுதிகள் 894 நகர்ப்புற பகுதிகளுக்கு சென்றடைந்தது. சுமார் 32 லட்சம் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு பயணம் தமிழ்நாட்டில், மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்தப் பயணம் 12,525 கிராமப் பஞ்சாயத்துக்களையும் 894 நகர்ப்புறப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது.
கிராமங்களில் 28,92,796 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 24,84,554 பேர் வளர்ச்சியடைந்த பாரத உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 313 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். 5,42,698 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டன. 3,94,339 பேர் விபத்துக் காப்பீட்டுக்கும், 2,81,834 பேர் ஆயுள் காப்பீட்டுக்கும் பதிவு செய்தனர். மருத்துவ முகாம்களில் 6,45,821 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் 3,05,709 பேருக்கு காச நோய் சோதனையும், 89,207 பேருக்கு அறிவால்செல் ரத்த சோகை சோதனையும் நடத்தப்பட்டது. பிரதமரின் கிசான் அட்டை பெறுவதற்கு 64,306 பேர் பதிவு செய்தனர். 20,858 பேருக்கு கிசான் அட்டைகள் வழங்கப்பட்டன. 10,894 ட்ரோன் செயல்விளக்க முறைகள் செய்து காண்பிக்கப்பட்டன.
நகர்ப்புற பகுதிகளில் 3,80,744 பேர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 1,09,282 பேர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 47,993 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் ஸ்வநிதி முகாம்களில் 10,786 பேர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம்களில் 20,048 பேர் கலந்து கொண்டதில் 3,891 பேர் ஆயுஷ்மான் அட்டை முகாம்களைப் பயன்படுத்திக் கொண்டனர். 3,185 பேர், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தனர். 6,731 பேர் ஆதார் அட்டை முகாம்களில் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: News