குழந்தைகளை ஒப்பிடா கூடாது! மதிப்பெண் பட்டியல் விசிட்டிங் கார்டு அல்ல! பிரதமர் அறிவுரை!
டில்லியில் தேர்வு நெருங்கும் நேரம் என்பதால் தேர்வு நேரத்தில் பயம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல அறிவுரைகளை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
அந்த உரையாடலில் பிரச்சனை என்பது தீராத ஒன்று வந்து கொண்டே தான் இருக்கும் அவற்றை சமாளிப்பதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதேபோன்று ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒரு போதும் ஒப்பிடாதீர்கள் ஒப்பிடவும் கூடாது, வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். அந்த போட்டி என்பது ஒரு மாணவர் மற்றொருவருடன் போடுவது போன்று அல்லாமல் தங்களோடு தாங்களே போட்டி போட்டு கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்களும் எழுச்சி பெறுவார்கள்! என்று பேசினார்.
மேலும் தன் குழந்தையை குறித்து பிறர் கூறும் குறைகளை வைத்து தவறாக நினைக்காதீர்கள், ஏனென்றால் அது அவர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும் அதே சமயத்தில் அதனால் நல்லதை விட தீமையை அதிகமாக செய்ய ஆரம்பிப்பார்கள்! மாணவர்களுக்கு சரியான உரையாடல் மூலம் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உரையாற்றினார்.
Source : Dinamalar