டிஜிட்டல் யுகத்தில் அதிநவீன சாதனைகளை படைக்க இருக்கும் இந்தியா.. எப்படி தெரியுமா?
2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கின் ஒரு பகுதியாக மூன்று உள்நாட்டு தொழில்நுட்பங்கள் தொழில் துறைப் பயன்பாடுகளில் இணைக்கப் பட்டுள்ளன. தில்லியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற "டிஜிட்டல் இந்தியா எதிர்கால ஆய்வகங்கள் உச்சி மாநாடு 2024" தொடக்க நிகழ்ச்சியின் போது, மூன்று உள்நாட்டு தொழில் நுட்பங்களான வெப்ப கேமரா, சிமாஸ் (CMOS) கேமரா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட கடற்படை மேலாண்மை அமைப்பு ஆகியவை 12 தொழிற்சாலைகளின் பயன்பாடுகளுக்கு வழங்கப்பட்டன. 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் புதுமைக் கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
தெர்மல் கேமரா: தெர்மல் ஸ்மார்ட் கேமரா பல்வேறு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் நகரங்கள், பல்வேறு தொழில்கள், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் பயன்பாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. சாலை போக்குவரத்து பயன்பாடுகளுக்காக இந்த கேமரா கள செயலாக்கம் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிமாஸ் (CMOS) கேமரா: இது அடுத்த தலைமுறை தொழில்துறை இயந்திர பயன்பாடுகளை மேற்கொள்ள சக்திவாய்ந்த கணினி இயந்திரத்துடன் உள்ளது.
கடற்படை மேலாண்மை அமைப்பு: கப்பல் செயல்பாடுகளை மேம்படுத்துவதையும், கப்பல் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு நிலைமைகள் தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை வழங்குகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் இந்த தொழில்நுட்பங்களை 12 நிறுவனங்களுக்கு வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்ற ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.
Input & Image courtesy: News