தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்கள்.. மத்திய அரசு கொடுத்த நிதியுதவி எவ்வளவா?

Update: 2024-02-09 01:36 GMT

தமிழ்நாட்டில் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக பெண்களும் சமுதாயத்தில் நல்ல ஒரு நிலைமைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மக்களவையில் இது தொடர்பாக கேள்வி ஒன்று எழும்பியது. அதற்கு மத்திய இணை அமைச்சர் அதிகாரப்பூர்வமான பதிலை அளித்து இருக்கிறார்.


தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய நிதியுதவியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று உறுப்பினர் கே சண்முகசுந்தரம், விஷ்ணு தயாள் ராம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராமத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இதனைத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் 3,36,044 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 40,02,881 பேர் இடம் பெற்றுள்ளனர். 2014-15 முதல் 2024 ஜனவரி 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ.1871.65 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.1835.95 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்கும் சேர்ந்து ரூ.3354.80 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News.

Tags:    

Similar News