இது தான் ஜனநாயகமா! புறக்கணிக்கப்பட்ட தேசிய கீதம்! மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!

Update: 2024-02-12 12:03 GMT

இன்று தமிழக சட்டப்பேரவை தமிழக ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆளுநரின் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றதால் ஆளுநர் தனது உரையை இரண்டு நிமிடத்தில் முடித்துக் கொண்டு சபையில் கண்ணியத்தையும் தனது பதவியின் கண்ணியத்தையும் காத்து அமர்ந்தார். ஆனால் இவருக்கு பிறகு சபாநாயகர் ஆளுநரை குறித்து விமர்சனம் செய்து நாதுராம் கோட்சே போன்றவர் இவர் என கூறியதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். 

இதனை அடுத்து சட்டப்பேரவையில் நடந்தவற்றிற்கும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியும் இசைப்படாமல் இருந்ததற்கும் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..! தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது. தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கிற அமைச்சர் போல செயல்படுகிறார்.

இது தான் ஜனநாயகமா? இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா? தேசிய கீதத்தைப் புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...? என பதிவிட்டுள்ளார். 

Similar News