ராஜ்யசபா தேர்தல்! வேட்பாளர் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றார் மத்திய இணை அமைச்சர் வேல்முருகன்!
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 ராஜ் சபா எம்பி களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது அதற்கான தேர்தலும் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடை உள்ள நிலையில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இதனால். மீண்டும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்பொழுது பாஜகவின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் பாரத தேசத்திற்கான, பாரத மக்களுக்கான சேவை செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கிய, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும்,தேசியத் தலைவர் திரு. ஜே பி நட்டா ஜி அவர்களுக்கும்,மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜி அவர்களுக்கும், மரியாதைக்குரிய திரு.பி. எல். சந்தோஷ் ஜி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ் சமூக வலைதள பக்கத்தில் மத்திய இணை அமைச்சர் பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் மாண்புமிகு மத்திய இணையமைச்சர், அண்ணன் திரு. எல். முருகன் அவர்களை, இரண்டாவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜக தேசியத் தலைவர் திரு ஜே பி நட்டா அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் திரு. பி. எல். சந்தோஷ் அவர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு எல். முருகன் அவர்களின் அயராத மக்கள் பணிகள் சிறக்கவும், தமிழகத்தின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிக்கவும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Source : Dinamalar