நமது கல்வி நிறுவனங்களை சர்வதேசமயமாக்கல் இலக்கு.. மத்திய அரசு உறுதி.. பிரதமர் பெருமிதம்..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆன மத்திய அரசாங்கம் நமது இந்திய மாணவர்களின் கல்வியின் தரத்தை உலக அரங்கில் மிளிர வைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020ன் படி பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில் தற்பொழுது இந்திய கல்வி நிறுவனங்களை உலக மயமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "புதிய கல்விக் கொள்கையின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நமது கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேசமயமாக்கல் இலக்குகளை மேற்கொள்ள எமது அரசு உறுதி பூண்டுள்ளது. ஐ.ஐ.டி-தில்லி-அபுதாபி வளாகம் மற்றும் ஐ.ஐ.டி-சென்னை- சான்சிபார் வளாகம் ஆகியவை இந்த உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த உணர்வை தனது கட்டுரையில் வெளிப் படுத்துகிறார்" என்று கூறினார்.
Input & Image courtesy: News