ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 47 வயதான மரியா அவ்வப்போது மூணாறுக்கு சுற்றுலா பயணம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூணாறுக்கு சுற்றுலா வந்த பொழுது சுற்றுலா வழிகாட்டியான சிவா உடன் மரியாவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஒரு முறை மரியா சிவாவை சந்தித்த பொழுது அவர் மாலை அணிந்து பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு திரும்பியதை அறிந்தவுடன் தனக்கும் பழனி முருகனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதனை அடுத்து கடந்த ஆண்டு மூணாறுக்கு சுற்றுலா வந்த மரியா, சிவா உடனே பழனிக்கு சென்றுள்ளார். அப்பொழுது பலரும் மாலையிட்டு விரதம் இருந்து முருகனை தரிக்க சென்றனர் என்பதை தெரிந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா மீண்டும் கடந்த வாரத்தில் ஸ்பெயினில் இருந்து மூணாறுக்கு வந்து மாலையிட்டு விரதம் இருந்து பல பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் 45 பேர் கொண்ட குழுவுடன் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நள்ளிரவில் பழனிக்கு செல்ல பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார் மரியா!
கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் நடந்து வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி அதாவது நாளை பழனியை சென்றடையும் மரியா நமது கலாச்சாரப்படி சேலை உடுத்தி மாலை அணிந்து அவர் செல்வதை பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று பழனிக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் என்பது மரியாவின் விருப்பமாகவும் கூறப்படுகிறது.
Source : Dinamalar