பல மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு புனித திருத்தலம் ராமேஸ்வரம். கடந்த மாதம் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முன்பு பிரதமர் இங்கு வந்து 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ததும் உலக நாடுகளின் கவனத்தை பெற்றது. அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஒரு ஐதீகம் அது மட்டும் இன்றி இதில் 22 ஆவது தீர்த்தமான கோடி தீர்த்தம் சகல மகிமையை கொண்டதாக கூறப்படுகிறது.
அதனால் இந்த கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாகவே கோடி தீர்த்தத்தை அரை லிட்டர் பாட்டிலில் இரண்டு மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கோவில் பிரசாத கடைகளில் பிரசாதமாக தலா ₹20க்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே கோவிலின் கிழக்கு, மேற்கு வாசல் மற்றும் சன்னதி தெருவில் உள்ள கடைகளில் 50 ரூபாய்க்கு வியாபாரிகள் கோடி தீர்த்தத்தை விற்பனை செய்வதாகவும் போலியான தீர்த்தத்தை விற்பனை செய்வதாகவும் பலர் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அதை தடுத்திட இந்த சமய அறநிலையத்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் கோவிலின் புனிதம் கெடுகிறதாக தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார். அதோடு கோவை இணை ஆணையர் சிவராம் குமார் இது குறித்து போலீஸ் புகார் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar