உலக தரம் வாய்ந்த சென்னையை உருவாக்க மோடியின் கையில் சென்னையை கொடுங்கள் - கொளத்தூரில் அண்ணாமலை!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளிட்ட அகரம் சந்திப்பில் நேற்று என் மண் என் மக்களின் நடைபயணம் நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை காக்கி சீருடை அணியும் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதோடு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதனை அடுத்து அப்பொது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் பொழுது குளத்தூர் மக்கள் 8 நாட்கள் தண்ணீருக்குள்லேயே இருக்கிறார்கள். குண்டும் குழியுமான சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் போதுமானதாக கிடைக்கப்படுவதில்லை. பிரதமர் மோடியை போன்ற சாமானிய மனிதர் ஆட்சிக்கு வரும்பொழுது இந்தியாவும் வளரும் ஒவ்வொரு மாநிலமும் வளரும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடி விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட முடியாது.
நாட்டில் பாஜக எம்பிகள் உள்ள தலைநகரங்கள் அனைத்துமே மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது! ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மூன்று தொகுதிகளிலும் திமுக குடும்பத்தின் ஆட்சி நடப்பதால் அவர்களுக்கு சாமானிய மனிதர்களின் வலி புரிவதில்லை! பேருந்து வசதியும் தற்போது சரிவர இல்லை சென்னைக்காரர்கள் வெளியூர் செல்வதற்கு கூட வெளியூருக்கு போய் தான் பேருந்து ஏற வேண்டும் போல!! முழுமையாக சென்னையை சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதனால் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்! சென்னை மாநகரை உலகம் தரம் வாய்ந்த மாநகரமாக உருவாக்குவதற்கு மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
Source : The Hindu Tamil thisai