சந்திரகிரி ஜெயின் மந்திருக்கு நான் சென்றதையும்... ஆச்சாரியா ஸ்ரீ வித்யாசாகர் ஜியுடன் நேரத்தை செலவிட்டேன் என்பதை என்னால் மறக்க முடியாது - பிரதமர் இரங்கல் பதிவு!
1968 இல் அஜ்மீரில் உள்ள ஆச்சாரியா சாந்தி சாகர் ஜி மகாராஜரின் பரம்பரையைச் சேர்ந்த ஆச்சாரியா ஞானசாகர்ஜி மகராஜ் என்பவரால் வித்யாசாகர் ஜி மகாராஜ் தனது 22 வது வயதில் துறவியாக தீட்சை பெற்றார். இன்றிலிருந்து தலையணை இல்லாமல் உப்பு, பால், எண்ணெய், நெய், சக்கரை, பழங்கள் ஆகியவற்றை சேர்க்காமல் ஒரு துறவியாக தனது வாழ்க்கையை வாழ்ந்த ஆச்சரிய வித்யாசாகர் சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி திருத்தத்தில் இன்று உயிரிழந்தார்.
இவரது இறப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில், " எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் எண்ணற்ற பக்தர்களுடன் உள்ளன. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக, குறிப்பாக மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்கான அவரது முயற்சிகள், வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பலவற்றிற்கான அவரது பணிகளுக்காக அவர் வரும் தலைமுறையினரால் நினைவுகூரப்படுவார்.
பல வருடங்களாக அவருடைய ஆசியைப் பெற்ற பெருமை எனக்கு உண்டு. கடந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் என்ற இடத்தில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்கு நான் சென்றதை மறக்கவே முடியாது. அந்த நேரத்தில், நான் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியுடன் நேரத்தை செலவிட்டேன், மேலும் அவருடைய ஆசியையும் பெற்றேன்" என கூறியுள்ளார்.