பிரபஞ்சத்தின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்க இஸ்ரோ அறிவித்தது இளம் விஞ்ஞானிகளுக்கான நிகழ்ச்சி!
இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை புகட்டுவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது. இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கடந்த 2019, 2022, மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 111, 153 மற்றும் 337 ஆகிய மாணவர்கள் பங்கேற்று வெற்றியோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்கை பற்றி பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விண்வெளி மற்றும் பிரபஞ்சத்தின் மீது அதிகம் ஆர்வமுள்ள இளம் உள்ளங்களின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்க இந்த வருடமும் இஸ்ரோ பள்ளி குழந்தைகளுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பதிவு செயல்முறை பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை நடைபெற உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
Source : Asianetnews Tamil