எனது மிகப்பெரிய சொத்து இதுதான்.. பிரதமர் மோடி கூறியது எதை தெரியுமா?..

Update: 2024-02-19 02:52 GMT

ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். நகர்ப்புறப் போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலா தொடர்பான பல முக்கியத் துறைகளை இந்தத் திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நிகழ்ச்சியையொட்டி கண் காட்சிகளையும் மோடி பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ரேவாரியின் துணிச்சலான மண்ணுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர் மீது பிராந்திய மக்கள் கொண்டுள்ள அன்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். 2013-ம் ஆண்டில் ரேவாரியில் பிரதமர் வேட்பாளராக தனது முதல் நிகழ்ச்சி தொடங்கியதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.


மக்களின் ஆசீர்வாதம் தனக்கு மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் கூறினார். மக்களின் ஆசீர்வாதங்களால் இந்தியா உலகில் புதிய உயரங்களை அடைந்துள்ளது என்று அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்குத் தாம் மேற்கொண்ட பயணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதை மற்றும் நல்லெண்ணத்திற்கு இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், G20, சந்திரயான், இந்தியப் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்தது ஆகியவை பொதுமக்களின் ஆதரவால் பெற்ற பெரும் வெற்றிகள் என்று அவர் கூறினார். வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்ற மக்களின் ஆசீர்வாதங்களை அவர் கோரினார்.


இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற, ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சி அவசியமாகும் என்று பிரதமர் கூறினார். ஹரியானாவின் வளர்ச்சிக்காக சாலைப் போக்குவரத்து, ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.10,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததாகவும், அடிக்கல் நாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர், ரேவாரி, குருகிராம் மெட்ரோ, பல்வேறு ரயில் பாதைகள், புதிய ரயில்கள், அனுபவ அருங்காட்சியகமான அனுபவ கேந்திரா ஜோதிசார் பற்றியும் குறிப்பிட்டார். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கற்பித்த பாடங்களை உலகிற்கு இது அறிமுகப்படுத்தும் என்றும், இந்தியக் கலாச்சாரத்தில் ஹரியானா மாநிலத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கும் என்றும் பிரதமர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஹரியானா மக்களை அவர் பாராட்டினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News