விஷ்ணுவின் பத்து அவதாரங்களை கொண்ட உலகின் முதல் கோவில்...பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்!
உத்திர பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளை பிரதமர் இன்று உத்தரபிரதேசத்தில் திறந்து வைக்க உள்ளார். மேலும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 14,000 திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுக்கிறார். முன்னதாக கல்கி தாம் புனித தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் கர்ப்ப கிரகங்களை கொண்ட உலகின் முதல் கல்கி கோவில் உத்திரபிரதேச மாநிலம் சம்பாலில் கட்டப்படுவதற்கான அடி கல் நாட்டியுள்ளார் பிரதமர்! பிரதமருடன் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உலகின் முதல் கல்கி கோவிலுக்கு அடிக்கல் நாட்டின் செயல் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம், இந்த விழாவிற்கு என்னை அழைத்த ஆச்சாரியா பிரமோத் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார்.
Source : Dinamalar